2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொன் அணிகள் கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு அழைப்பாணை

Niroshini   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பின்னெல் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு சந்தேக நபர்களையும்; யாழ். மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை(06) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் - யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற வருடாந்தம் பொன் அணிகள் கிரிக்கட் போட்டியின் போது, மைதானத்தில் வைத்து ஜெயரட்ணம் தனுஷன்அமலன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன், நாகராஜா காந்தரூபன் மற்றும் சுந்தரலிங்கம் பிரகாஷ் ஆகிய 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால்  யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, செவ்வாய்க்கிழமை(06) நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்தன் எதிரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக, அவர்களுக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, சந்தேக நபர்கள் அறுவருக்கும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 12 தடயப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 16 பேர் சாட்சிகள் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X