2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பாம்புக்கு தீ மூட்டிய பெண் உயிரிழப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அடித்த பாம்பை தீ மூட்டி எரிக்க முற்பட்ட இளம் தாயொருவர் தீக்காயங்களுக்குள்ளாகி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரமேஸ்வரன் பிரதீபா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தைபொங்கலுக்கு முதல் நாள் அன்று வீட்டு முற்றத்தை மெழுகும் போது, பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை அடித்து கொன்ற குறித்த பெண், பாம்பை எரிப்பதற்காக பெற்றோலை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இதன்போது, அவரது உடல் மீதும் தீ பரவியதையடுத்து அவரை காப்பாற்றிய கணவன்; மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்ததார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X