2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 18 புதன்கிழமையன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, எமது தேசியக் கடமையாகக் கொண்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டி, எமது வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரையும் மே 18 அன்று, தத்தமது வர்த்தக நிலையங்களை மூடி, முடிந்தவரை தத்தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகக் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும், 'தமிழர் தேசியப் பெருந்துயரை' உலகுக்குப் பறைசாற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தவிர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் காரணமாகக் கலந்துகொள்ள முடியாதவர்கள், தத்தமது இல்லங்களில் நெய்விளக்கேற்றி, போரில் உயிர்நீத்த எமது உறவுகளை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X