2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பிரதேச சபையின் அனுமதியின்றி வரி அறவீடு

Niroshini   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி, அதன் அதிகாரத்துக்குட்ட காக்கைதீவு மீன் சந்தையில் ஒரு சிலரால் வரி அறவீடு செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பிரதேச சபை செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.

மேற்படி சந்தையை 20106ஆம் ஆண்டு குத்தகைக்கு விடுவதற்காக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் விலை மனுக் கோரப்பட்டது. கேள்வி கோரலின்போது, ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தை குத்தகைக்கு விடப்படாமல் கடந்த 9 மாதங்களாக இயங்கி வருகின்றது.

இதனையடுத்து, காக்கைதீவு இறங்குதுறையில் கூறுவிலை மண்டபத்துக்கு அருகாமையில் பிரதேச சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மண்டபத்தில் வைத்து வியாபாரிகள் கடலுணவை விற்பனை செய்கின்றனர்.

மீன் வியாபாரிகளுக்கும் பிரதேச சபைக்கும் இடையில் வரி அறவிடுவது தொடர்பில் ஏற்பட்ட பிணக்கு குறித்து, மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வியாபாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை மண் போட்டு நிரப்பி சந்தை அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பிரதேச சபையின் அனுமதியின்றி சந்தையில் ஒரு சிலர் வரி அறவிட்டு வருகின்றனர்.

ஆனால், வரி அறிவிடுவதற்கு எவருக்கு அனுமதி வழங்கப்படவில்லையென பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X