Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
பாரிசவாத நோயின் தாக்கத்தால் வடக்கில் 10,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.
உலக பாரிசவாத நோய் தினமான இன்று யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஒரு வாரத்தில் 3 தொடக்கம் 5 வரையானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன், வைத்தியசாலையில் காணப்படும் விசேட பாரிசவாத சிகிச்சைப் பிரிவில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15 பேர் அனுமதிக்கப்பட்டு, 9 பேர் குணமடைந்ததுடன், 6 பேர் இயலாமல் போயுள்ளனர்.
பாரிசவாதத்தால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்ற போதும், சிகிச்சை பெற வருபவர்கள் குறைவாகவுள்ளனர். உலகில் 6 செக்கனுக்கு ஒருவர் இந்த நோயால் இறக்கின்றனர். உலகில் அதிகளவானவர்கள் இறக்கும் நோய்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. பாரிசவாதத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இலங்கை 4 ஆவது இடத்தில் உள்ளது.
பாரிசவாத நோய் ஏற்பட்ட 4 ½ மணித்தியாலங்களுக்குள் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதன் மூலம், முழமையான அந்த நோயிலிருந்து அவரை விடுவிக்க முடியும். நேரம் தாதம் ஆகினால், மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைந்து மூளைக்கலன்கள் இறக்கத் தொடங்குவதால் நோய் நிரந்தரமாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago