Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 29 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி வீட்டுத்திட்ட பொருத்து வீடுகள் (இரும்பு வீடுகள்), வடக்கு மக்களுக்கு பொருத்தமற்றவை எனவும் அவற்றை நிறுத்தி, அவற்றுக்குப் பதிலாக வடக்குக்கு பொருத்தப்பாடுடைய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், கடந்த 24ஆம் திகதியன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேற்கொள்காட்டி அவைத்தலைவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். ஆனால், இந்த பொருத்து வீடுகளை எங்களுக்கு வழங்கியதையிட்டு மனவருத்தம் கொள்கின்றோம். 2.1 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படுவது அதிகூடிய செலவாகும்.
இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வீட்டின் சுவர் வலிமையற்றது. இலகுவில் உடையக்கூடியது. திருடர்கள், கொள்ளையர்கள் ஆகியோருக்கும் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோருக்கும் இந்த வீடுகள் இலகுவான வழிகளை ஏற்படுத்திவிடும்.
மேலும், இந்த 2.1 மில்லியன் ரூபாய் செலவில் வடக்கில் சாதாரணமாக கட்டப்படும் சீமெந்து வீடுகள் இரண்டைக் கட்டிவிட முடியும். இந்த வீடுகள் வடக்கிலுள்ள காலநிலை மற்றும் சூழலுக்கு முற்றும் பொருத்தமற்றதாகவுள்ளது.
வெப்ப காலங்களில் இந்த வீடுகள் அதிகளவான வெப்பமாக காணப்படுவதுடன், மழை காலங்களில் வெள்ளம் வீடுகளுக்கும் புகுந்துகொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது.
இந்த வீடுகள் தொடர்பில் நாங்கள் திருப்பதியற்று இருக்கின்றோம். ஆதலால் இந்து வீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இது தொடர்பில் பரிசீலனை செய்யவும்' என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
24 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago