2025 ஜூலை 19, சனிக்கிழமை

புறாத்திருடன் கைது

Menaka Mookandi   / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூட்டுக்குள் இருந்து 5 சோடி புறாக்களை திருடிய நபரை செவ்வாய்க்கிழமை (12) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடியவர், குருநகர் தொடர்மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய நபர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பகல் யாரும் இல்லாத நேரம் பார்த்து உள் நுழைந்துள்ள திருடன், 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 சோடி புறாக்களை திருடி வெளியேற முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், அவரை கையும் மெய்யுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X