2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்கின்றது

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லாட்சி அரசாங்கம் மாறினாலும், கடந்த அரசாங்கத்தின் காட்சிகள் மாறவில்லை. புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலும் தொடர்கின்றன  என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் ச.சஜீவன் திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (07) விஜயம் செய்த, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுசைன், நலன்புரி முகாம்களுக்கு சென்று பார்வையிடுவதை குழப்பும் முயற்சியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டனர்.

சபாபதிப்பிள்ளை முகாமுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர்  வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சபாபதிப்பிள்ளை முகாம் மக்களை குழப்பும் வகையில், இந்த முகாமுக்கு வரவில்லை எனவும் கோணப்புலம் முகாமுக்கு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வருவார் எனவும் இந்த மக்களை அந்த முகாமுக்கு வருமாறும் புலனாய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

அதேநேரம் காலையில் இங்கு நாம் கூடி இருந்த வேளை, இரு புலனாய்வாளர்கள் ஊடுருவி இருந்தார்கள். நாம் என்ன கதைகின்றோம், என்ன செய்கின்றோம், என்பதை கண்காணித்துக்கொண்டு இருந்தார்கள்.

நல்லாட்சி நடைபெறுகின்றது, என்று கூறப்படுகின்ற போதிலும், இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள், மக்களை குழப்பும் மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X