Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர்த்திசெய்ய கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சென்று வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இது உண்மையிலேயே நல்ல முயற்ச்சி. லண்டனிலே முதலீடு செய்யும் போது அதன் பயன் முழுவதும் அந்த நாட்டுக்கே சேரும் அவ்வாறு இல்லாது இன்பவரன் இங்கு முதலீடு செய்வது ஒரு முன்மாதிரியான நிகழ்வு இவ்வாறான முதலீடுகளை புலம்பேர் உறவுகள் எமது பகுதியில் செய்யவேண்டும்.
ஏனெனில் இங்கு இதை செய்யும் போது போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இந்குள்ள வாகனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்யக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதேபோன்று, இங்குள்ள அரச திணைக்கள வாகனங்கள் கூட டீசல் செலவளித்து பல மைல் துரம் சென்றே இந்த சேவையை பெறுகின்றனர். அவர்களுக்கும் வீண்செலவை குறைக்கக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைகிறது.
எனவே, இவ்வாறான மாவட்டத்துக்கான தேவையுள்ள திட்டங்களுக்காக புலம்பேர் உறவுகள் இங்கு முதலீடு செயய்யுமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago