2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புலிகளின் முகாமில் ஆயுதங்கள் இல்லாமையால் அகழ்வுப் பணி தோல்வி

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, இன்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அவ் இடங்களில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்காமையால் அகழ்வுப் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X