2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பாலை தீராந்திகளை கடத்தியவர் கைது

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிளிநொச்சி பகுதியில் இருந்து அச்சுவேலி தெற்கு பகுதிக்கு கப் ரக வாகனத்தில் பாலை மரத்தீராந்திகளை கடத்தி வந்த வாகன சாரதியை புத்தூர் சந்தியில் வைத்து, திங்கட்கிழமை (06) மாலை கைது செய்துள்ளதாக அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வாகனத்தில் இருந்த 92 பாலை மரத்தீராந்திகள் கைப்பற்றப்பட்டன.

வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே ஜெயசிங்க, புத்தூர் சந்தியில் இருந்து மீசாலை நோக்கி வந்து கொண்டிருந்த கப் ரக வாகனத்தை மறித்து சோதனையிட்டார்.

இதன்போது, அனுமதிபத்திரமின்றி பாலை மரத்தீராந்திகள் கடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபரான சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்குரிய நீதிமன்ற கட்டளையை மல்லாகம் நீதிமன்றில் கோரவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X