2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புலி திரைப்படம் பார்த்தோர் விபத்தினால் காயம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சாவகச்சேரியிலுள்ள திரையரங்கில் புலி திரைப்படத்தை  பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர்,  வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த சிவானந்தராஜா சுமன் (வயது 28), சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனுசன் (வயது 17) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

இவ்விருவரில், சுமன் என்பவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .