2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் காவலில் இருந்தவர் மர்ம மரணம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

காணாமற்போனவரை மீட்டுத்தருவதாகக் கூறி, கப்பம் பெற முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாவகச்சேரியைச் சேர்ந்த சந்தேகநபர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய கந்தசாமி கிருஸ்ணன் என்ற சந்தேகநபரே, இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேநபரை பிடித்துக்கொடுத்த பாதிக்கப்பட்டவர்கள், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர். எனினும், குறித்த முறைப்பாட்டுப் பிரதேசம் கோப்பாய் பொலிஸ் எல்லைக்குள் இருந்தமையால், சந்தேகநபரையும் அவர் மீதான முறைப்பாட்டையும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக, யாழ். பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பில், யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது,

'ஏற்கெனவே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தொடர்பான முறைப்பாடு இருக்கின்றது. புதிய முறைப்பாட்டையும் முறைப்பாடு செய்தவர்களையும் கோப்பாய் பொலிஸாரிடம் கையளிப்பதற்காக யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார், குறித்த சந்தேகநபரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றிருந்தனர்.

இதன்போது அந்தச் சந்தேகநபர், முச்சக்கரவண்டியில் இருந்தவாறு நஞ்சினை அருந்தியுள்ளதுடன், திடீரென கீழே இறங்கி, முச்சக்கரவண்டிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த முறைப்பாட்டாளரைத் தாக்குவதற்காக சென்றுள்ளார். பின்னர், சந்தேநபரை பிடித்த பொலிஸார், யாழ். வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதனையடுத்து, சந்தேகநபர் இறந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலிஸ் நிலையத்துக்குள் நடைபெறவில்லை' என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X