2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் காவலில் கொலை:சுருக்க முறையற்ற விசாரணை

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை, சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சுருக்கமுறையற்ற விசாரணை, எதிர்வரும் 10 ஆம் திகதி, கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, முன்னிலையில் இந்த வழக்கு, நேற்றுத் திங்கட்கிழமை (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, “சுருக்க முறையற்ற விசாரணை செய்வதற்காக, இந்த வழக்கை மீண்டும் 10 ஆம் திகதி எடுத்துக்கொள்ள வேண்டும்” என குற்றப்புலனாய்வுப் பொலிஸார், நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதனையடுத்து, சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். அதில் ஒரு இளைஞன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டதாக, கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X