Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட சந்தேகநபர், யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்தார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசையா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற தாபரிப்பு வழக்கு ஒன்றின் எதிராளியான குறித்த நபர், வழக்கு தவணைகளில் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காததால் அவருக்கு எதிராக 18ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த நபர் நெல்லியடி பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மண்ணெண்ணெயை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டிகொண்டுள்ளார்.
தீயை அணைத்த பொலிஸார், சந்தேகநபரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சிறைக்கூண்டுக்குள் எவ்வாறு மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி என்பன கொண்டுவரப்பட்டன என்பதை கடமையிலிருந்த உப-சேவை அதிகாரி, நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago