2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொலிஸாரை காயப்படுத்தியவர் 10 நாட்களின் பின்னர் கைது

Kogilavani   / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்று, பொலிஸாருக்கு காயம் ஏற்படுத்திய உழவு இயந்திரத்தின் சாரதி, சனிக்கிழமை (30) அரியாலை முள்ளி பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக  மணல் அகழ்ந்து வந்த உழவு இயந்திரத்தை பொலிஸார் வழிமறித்தனர். இதன்போது பொலிஸாரின் சமிக்கையை மீறி உழவு இயந்திரத்தின் சாரதி சென்றுள்ளார்.

பொலிஸார் உழவு இயந்திரத்தை பின்தொடர்ந்த போது உழவு இயந்திர பெட்டியை சாரதி சடுதியாக கழற்றியுள்ளார். துரத்திச்சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தின் பெட்டியுடன் மோதி விபத்துக்குள்ளாயிருந்தனர்.

இச்சம்பவத்தில் தலையில் படுகாயங்களுக்கு உள்ளான பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி முள்ளி பகுதியில் உள்ள காட்டில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து தகவல் காட்டை சுற்றி வளைத்த பொலிஸார், அரியாலையைச்  சேர்ந்த 26 வயது இளைஞனை கைதுசெய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X