2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரால், இமையாணன் மேற்கு உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நற்குணம் லிசாந்தன் (வயது 22) என்ற இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், நேற்று திங்கட்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் பயன்படுத்திய அலைபேசியிலிருந்து மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அநாமதேய அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணைக்கு வருமாறு அவ்விளைஞனை அழைத்திருந்த அந்த உத்தியோகஸ்தர், எதுவித ஆரம்ப விசாரணையுமின்றி, தன்னைத் தாக்கியதாக கூறியுள்ளார்.

வாயில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, உடல் முழுவதும் அடிகாயங்களுக்குள்ளான நிலையிலேயே, அவ்விளைளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தனக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் பிரிவு 2க்கான அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X