Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கண்டாவளை பிரதேச செயலகம் தற்போது அமைந்துள்ள வெளிக்கண்டல் பகுதியிலேயே அச்செயலகத்துக்கான நிரந்தரக் கட்டடத்தை அமைக்குமாறு கோரி, அப்பிரதேச சேர்ந்த மக்கள், நேற்று வியாழக்கிழமை (29) பேரணியொன்றை நடத்தினர்.
பேரணி முடிவில் பிரதேச செயலாளரிடம் வழங்குமாறு, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், அதன் பிரதிகள், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் மாவட்டச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
கண்டாவளைப் பிரதேச செயலகம், தற்போது வெளிக்கண்டல் சந்தியில் அமைந்துள்ளது. செயலகத்தின் நிரந்தரக் கட்டடத்தை புளியம்பொக்கனையில் அமைப்பதற்கான நடவடிக்கை மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.
அவ்வாறு இல்லாமல், அதேயிடத்தில் நிரந்தரக் கட்டடத்தை அமைக்குமாறு கோரி இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago