2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பூவரசன்குளம் - துணுக்காய் வீதி புனரமைக்கப்படவில்லை

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா, பூவரசன்குளம் முதல்; முல்லைத்தீவு துணுக்காய் வரையான பிரதான வீதி மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால், குறித்த வீதியை மையமாக கொண்ட சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயக் கிராமங்களில் வாழும் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வவுனியா மன்னார் வீதியின் பூவரசன்குளம் சந்தியில் இருந்த கோவில்மோட்டை, வேலன்குளம், இரண்டாம் செங்கல்படை, இரணை இலுப்பைக்குளம், கோயில்குளம், விளாத்திக்குளம், மண்கிண்டி, பரசன்குளம், வலையன்கட்டு, மூன்றுமுறிப்பு இளமருதன்குளம் வீரப்;பிராயர்குளம் உள்ளிட்ட வவுனியா மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகின்றது.

சுமார் 46 கிலோமீற்றர் நீளமான வவுனியா பூவரசன்குளம், முல்லைத்தீவு துணுக்காய் வீதியானது, 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித புனரமைப்புக்களுமின்றி சேதமடைந்து, மக்களால் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

பின் தங்கிய மேற்படி கிராமங்களில் வாழும் மக்கள் மருந்து வசதி உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு வவுனியா அல்லது மன்னாருக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு ஒரே வீதியாக காணப்படும் இவ்வீதி புனரமைக்கப்படாமையில்,  தாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X