Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிஸ்கட் தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 05 மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் சிசு, நேற்று திங்கட்கிழமை (14) மரணமடைந்த சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (13) இரவு சிசுக்கு பாலில் பிஸ்கட்டையும் சேர்த்துக் கொடுத்து உறங்க வைத்துள்ளனர்.
திங்கட்கிழமை (14) அதிகாலை எழுந்து சிசுவை தூக்கிய போது, சிசு அசைவின்றிக் கிடந்துள்ளது. உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிசுவை தாய் எடுத்துச் சென்றபோதும், சிசு ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையில் பிஸ்கட் தொண்டையில் சிக்கியமையினால் சிசு மரணித்தது எனக் கூறப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago