2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மகாத்மா காந்தியின் 71 ஆவது நினைவு தினம்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் 71 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று (30) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் மலர் மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன், வடமாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்.மாநகர ஆணையாளர் எஸ். ஜெயசீலன் மற்றும் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள், உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X