2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மக்கள் கருத்தறியும் இரண்டாவது நாள் அமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது..

நல்லாட்சி அரசாங்கம், இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையும் சேர்த்து மக்களுடைய கருத்துக்களை உள்வாங்கி அரசியலமைப்பு மறுசீரமைப்பைச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக உருவாக்கப்பட்ட குழு இலங்கையின் சகல பாகங்களிலும் அமர்வுகளை நடத்தி பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றது. இதற்கமைய, யாழில் மக்கள் கருத்துக்களை கேட்கும் அமர்வு, 8 விசாரணையாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விசாரணைக்குழுவின் முதல் அமர்வு யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (15) ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகன்றது.

முதல் நாள் அமர்வில் கருத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இரவு 7 மணி வரையில் கருத்துக்கள் பதியப்பட்டன. இதனால் இன்றைய அமர்வில் முக்கிய விடயங்களை மாத்திரம் குறிப்பிடுவதற்கு கருத்தாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X