2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மக்களின் அனுசரணையிருந்தாலே நன்னீர்த்திட்டம்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மக்களின் அனுமதி இருந்தால் மாத்திரமே மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

நன்னீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்றது. சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை வரும் போது, அந்த அறிக்கையை மக்கள் சார்பாகவே நாங்கள் பார்ப்போம். மக்களுக்கு பாதிப்பில்லாத போதே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடுவோம். மக்களின் அனுமதியில்லாவிட்டால் இது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றார்.

'அந்தப் பிரதேசத்தின் கடல்நீரின் உவர்த்தன்மை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. அது உண்மையானது' எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு) கடல் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நன்னீர் கொண்டு வரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X