2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Niroshini   / 2016 நவம்பர் 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிபத்திரத்தில் உள்ள நிபந்தனையை மீறி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய சாரதியை நேற்று வியாழக்கிழமை (10) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாவில் குளத்தடியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் சேரன்பற்று பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சாரதி என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசேட ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் யாவில் குளத்தடியில் மணல் ஏற்றிய சாரதியை சந்தேகத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது 11ஆம் திகதி மணல் ஏற்றுவதற்கு அனுமதியினை பெற்றிருந்த சாரதி, முறைகேடாக 10ஆம் திகதி மணல் ஏற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சாரதி கைது செய்யப்பட்டதுடன், அவரை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X