2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மண்டைதீவிலிருந்து ரவைகள் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மண்டைதீவு, பூநரின் பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்து, ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்கரையில் உள்ள பற்றைக்காடு ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பெட்டிகளில் இருந்தே, இந்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடற்படையினர் கூறினர்.  

இந்த ஆறு பெட்டிகளிலும், சுமார் 3 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், குறித்த பகுதியில், செவ்வாயன்று (27) மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் கூறினர்.

இவ்விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட ரவைகளும் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X