2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மதுபானசாலைகள் குறையவேண்டும்: மாவட்ட செயலாளர்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் குறைவடைய வேண்டும் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இன்று புதன்கிழமை (27) தெரிவித்தார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து முறைகேடாக இயங்கிய 8 மதுபானசாலைகளை மூடினர்.

மூடப்பட்ட மதுபானசாலைகள், மதுவரித் திணைக்களம் கோரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அவை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அந்த அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட 5 மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுபானசாலைகள் தொடர்பில் எவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என மாவட்டச் செயலாரிடம் வினாவியபோது, 'பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அண்மையில் இருந்த மற்றும் மதுவரித் திணைக்கள நியதிகளை பின்பற்றாத மதுபானசாலைகள் மூடப்பட்டன. விடுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன' என்றார்.

'யாழ். மாவட்டத்தில் மதுபானசாலைகள் குறைக்கபட வேண்டும் என எதிர்பார்கின்றோம். அத்துடன், பொது இடங்களுக்கு அப்பாற்பட்டு அவை அமைந்திருக்க வேண்டும் எனவும் எதிர்பார்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X