2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மதுபான பாவனையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் மதுபான நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள மாவட்ட செயலாளர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அந்த அறிக்கை கிடைத்தவுடன் மதுபான பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, 'யாழ்ப்பாணத்தின் அதிகளவான மதுபான நுகர்வால், திறைசேரிக்கு அதிகளவு பணம் கிடைப்பதாக, அண்மையில் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இதனைக் குறைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படுகின்றனவா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், 'யாழ்ப்பாணத்திலுள்ள சட்டவிரோத மதுபானசாலைகள், முறைகேடான மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பான தரவுகள் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குழு ஒன்று மாவட்ட செயலாளரின் கீழ் தற்போது செயற்படுகிறது. இக்குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை அறிக்கை கிடைத்தவுடன், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X