Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத கசிப்புக் காய்ச்சுதல் மற்றும் விற்பனை, போதைப்பொருள் என்;பவற்றுடன் தொடர்புபட்ட 471 வழக்குகளில் 3.08 மில்லியன் ரூபாய் (3,087,500) தண்டமாக அறவிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மதுவரித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மதுவரித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கசிப்புக் காய்ச்சுதல், விற்பனை, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை, மேலதிகமாக கள் வைத்திருந்தமை மற்றும் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் 471 வழக்குகள் அந்தந்த நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை தொடர்ந்து மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கசிப்புக் காய்ச்சுதல் மற்றும் விற்பனை அதிகளவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago