2025 மே 19, திங்கட்கிழமை

மனித உரிமையை வலியுறுத்தி யாழில் அமைதி ஊர்வலம்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பன்னாட்டு மனித உரிமைகள் தினமான இன்று (10) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மனித உரிமைகள் முதலுதவி சங்கத்தினரும், இலங்கை சமாதானப் பேரவையும் இணைந்து பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நிகழ்வென்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வுக்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.பிராந்திய மனித உரிமைக்குழு ஆணையாளர் ரி.கனகராஜ், பேராசிரியர் ம.பெ.மூக்கையா, பொலிஸ் அத்தியட்சகர் பி.யு.உடுகம, இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத் தலைவி சி.சூரியகுமாரி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலம் துர்க்காதேவி மண்டபம் வரை இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X