2025 மே 19, திங்கட்கிழமை

மனோ கணேசனுக்கு கௌரவிப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனைக் கௌரவிக்கும் நிகழ்வு யாழில் இன்று (30) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்கமைய அமைச்சருக்கு கௌரவிக்கும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையான கரவெட்டி பிரதேச சபையில் பிரதேச சபைத் தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இன்று (30) புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது மங்கள வாத்தியங்களுடன் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு பொன்னாடைகள் அணிவித்தும் நினைவுப் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X