2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மன்னாரில் திருடிய முச்சக்கரவண்டியுடன் யாழில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மன்னார் உடப்புப் பகுதியிலுள்ள வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை, மூன்று மாதங்களுக்கு முன்னர் திருடிய சந்தேகநபரை, யாழ்ப்பாணம் - நல்லூரில் நேற்று வெள்ளிக்கிழமை (19) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நல்லூர் பகுதிக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸார், திருடப்பட்ட முச்சக்கரவண்டியினை மீட்டதுடன், நாவற்குழி பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபரை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X