2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் மனைவி மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் மேற்கொண்டு வந்த கணவனை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார்.

அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் மேற்படி குடும்பஸ்தருக்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக மதுவெறுப்பு சிகிச்சை வழங்கி அதன் அறிக்கையினை 25ஆம் திகதி வழக்குத் தவணையின் போது மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

கொடிகாமம் பகுதியை சேர்ந்த மேற்படி நபர், தினமும் குடித்துவிட்டு, மனைவியை தாக்குவதும், சாப்பாட்டுத் தட்டால் எறிவது, சமையல் பாத்திரங்களை அடித்துடைப்பது போன்ற வீட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவனின் தொல்லை தாங்க முடியதாக பெண், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை, பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X