2025 ஜூலை 19, சனிக்கிழமை

மரணத்தில் சந்தேகம்: இறுதிச் சடங்கு நிறுத்தப்பட்டது

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்

இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு தகனக் கிரியைகள் செய்ய ஆயத்தமான சடலத்தை, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சடலத்தை பொறுப்பேற்ற ஊர்காவற்றுறை பொலிஸார், அதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த சம்பவமொன்று காரைநகரில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

காரைநகர், வாரிவளவைச் சேர்ந்த கார்த்திகேசு தவராசா (வயது 49) என்பவர் வவுனியாவில் கடையொன்றில் பணியாளராக வேலை செய்தார்.

கடை உரிமையாளர், இவரை தும்புத்தடியால் ஒருமுறை தாக்கியுள்ளார். அதன் பின்னர் நோய்வாய்ப்பட்ட குறித்த நபர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த 14ஆம் திகதி மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை (16) இரவு வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார். நியூமோனியால், இவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இவரது சடலத்தைப் பொறுப்பேற்ற உறவினர்கள், இறுதிக் கிரியைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிலர் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, இறுதிக் கிரியைகள் நடந்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X