2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

George   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழை கால நிலை காரணமாக, வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி கட்டட திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தரான சச்சிதானந்தம் சயந்தன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை வதிவிடமாக கொண்ட இவர், வியாழக்கிழமை (01) காலை மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு பறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்போது சாவகச்சேரி பகுதியிலேயே வீதியோரமாக இருந்த மரம், புயல் காற்று காரணமாக சரிந்து விழுந்தபோது குறித்த நபர் அதனுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X