Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ராஜ்
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரியாகவும், ஓட்டோ ஓட்டுநரொருவராக உள்ளதொருவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள், தொடர்புடையவர்கள் என 394 பேரின் மாதிரிகள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் பெறப்பட்டன.
இன்று பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஏனையவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படவேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago