Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக சிரேஸ்ட சத்திர சிகிச்சை நிபுணரும் மருத்துவ பீட சத்திரசிகிச்சைத் துறை தலைவருமான வைத்தியக்கலாநிதி சுப்பிரமணியம் ரவிராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சிரேஸ்ட சத்திர சிகிச்சை நிபுணர்களுள் ஒருவரான வைத்தியர் ரவிராஐ;, சுகாதார அமைச்சின் கீழ் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
யுத்தக் நெருக்கடி மிகுந்த காலங்களில் யாழ். போதனா வைத்தியசாலை சிரமங்களுக்கு மத்தியில் இயங்கியபோது அதன் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். தற்போது மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அவர், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பீடாதிபதியாகக் கடமையாற்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago