Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 13 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் இன்று புதன்கிழமை (13) ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த இந்த பேரணியில், 7 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி, பலாலி வீதி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வரை சென்றது.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகெண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது. இதனால் மருத்துவபீட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர். மேலும், இதுவரை காலமும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சி அனுமதிகள் வழங்கப்பட்டன. இதேபோன்று தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத் துறையில் கற்றவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
3 பி பெறுபேறுகள் எடுத்தவர்கள் மருத்துவ பீடத்துக்கு நுழையாமல் இருக்க, 2 சி, எஸ் எடுத்தவர்கள், தனியார் துறையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதனால் பணம் உள்ளவர்கள் கல்வியைப் கற்றுச் செல்லலாம் என்ற நிலை உருவாகி, மருத்துவத்துறை மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பு குறைவடையும். இந்நிலை மாற்றப்பட வேண்டும் எனக்கூறினர்.
31 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
9 hours ago
9 hours ago