2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மல்லாகம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏல விற்பனை

Sudharshini   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

உரிமை கோரப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களின் ஏல விற்பனை சனிக்கிழமை (12) மல்லாகம் மாவட்;ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையான காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இதன்போது, பொலிஸாரினால் கைபெற்றப்பட்ட படகு, வெளியிணைப்பு இயந்திரம், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகள், சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்திய மின் வடங்கள், விவசாய உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் கதிரைகள் என்பன ஏலத்தில் விடப்பட்டன.

மாவட்ட நீதிமன்ற பதிவாளர் எஸ்.ஸ்ரீமோகன் தலமையில் நடைபெற்ற ஏல விற்பனையில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X