Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 18 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் வயல் நிலங்களில் பயிரிடப்பட்ட வெங்காயம், மிளகாய், கச்சான், சனல், எள்ளு போன்ற சிறுதானியங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் காலபோக அறுவடையைத் தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் வயல் நிலங்களில் வெங்காயம், மிளகாய், கச்சான், சனல், எள்ளு போன்ற சிறு தானியங்களினைப் பயிரிடுவது வழக்கம்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் சுதுமலை, மானிப்பாய், நவாலி, சங்கரத்தை, பண்டத்தரிப்பு, வடலியடைப்பு ஆகிய இடங்களிலுள்ள வயல் நிலங்களில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வயல் நிலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. இதனால், பயிரிடப்பட்ட சிறு தானியங்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன.
இதேவேளை, இடையிடையே வீசிய காற்றினால் வாழை மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
4 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago