2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மஹிந்தவுடன் சி.வி.யை ஒப்பிட்டது தவறு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வடமாகாண முதலமைச்சரை ஒப்பிட்டுக் கதைத்தமை கீழ்த்தரமான செயல். பிரச்சினை பற்றிக் கதைக்கும் போது, அதை மாத்திரம் கதையுங்கள் என ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். 

நேற்றைய வடமாகாணசபை அமர்வின்போது, 'யோஷித ராஜபக்ஷவுக்காக மஹிந்த ராஜபக்ஷ சட்டத்தரணியாக நீதிமன்றத்துக்கு வந்ததைப்போல, வடமாகாண விவசாய அமைச்சரின் குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் சட்டத்தரணியாக வந்துள்ளார்' என உறுப்பினர் சயந்தன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட ஜி.ரி.லிங்கநாதன், 'விவசாய அமைச்சருக்கு எதிராக, நான் குற்றச்சாட்டை முன்வைக்காமல் பிரேரணையாக முன்வைத்தமை பிழை என்று கூறுகின்றீர்கள்?. இந்தக் குற்றச்சாட்டுக்களை நான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொண்டு சென்றிருக்க முடியும். இருந்தும் வடமாகாண சபையில் இருந்த நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு கொண்டு வந்தேன் என்றார்.

இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்ட மறுதினம், முழங்காவிலில் நடைபெற்ற நிகழ்வில், விவசாய அமைச்சர், தான் பனங்காட்டு நரியென்றும் சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்றும், காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லெறி விழும் என கூறியுள்ளார். இது பிரேரணை கொண்டு வந்த எங்களை அவமதிக்கும் செயல் ஆகும்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X