2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என கடந்த 12ஆம் திகதி  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (18) ஆஜர்ப்படுத்தினர்.

ஆசிரியருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .