2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாபெரும் மக்கள் ஒன்றுகூடல்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக,  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டு செய்துள்ள மாபெரும் மக்கள் ஒன்றுகூடல், யாழ்ப்பாணம், நல்லூர்க் கோவில் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில், எதிர்வரும் 24ஆம் திகதி  காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஓர் அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளது.  இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் முகமாகவே, இந்த மக்கள் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X