Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு குழுவை நியமித்து, அந்தந்தப் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பில், இரு வாரங்களுக்குள் ஆலோசனைகள் கொண்ட அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கும் வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், பிரிவு தலைவர்கள், சாமாஜங்களின் பிரதி தலைவர்கள், திணைக்களத்தின் செயலாளர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், இன்று (24) காலை நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
இதன்போது, வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பில் இருக்கக் கூடிய சிக்கல் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது.
அங்கு கருத்துரைத்த ஆளுநர், வடக்கின் மூலபொருள்கள் நாட்டின் இதர பாகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் வடக்கு மக்களுக்கே விற்பனை செய்யபடுகின்றனவெனவும் இந்தநிலையில் இருந்து நாம் மீள வேண்டுமெனவும் கூறினார்.
வருடத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படகூடிய செயற்ப்பாடுகளை விட வருடத்தின் 365 நாள்களும் இயங்க கூடிய திட்டங்களே தமக்குத் தேவையெனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் நட்டமடைவதற்கு, தனிப்பட்ட ஆற்றல்கள் மேம்படுத்தபடாமை, வியாபார உத்திகளைக் கொண்டு சரி வர இயங்காமை ஆகியனவே காரணமாக இருக்கின்றனவெனத் தெரிவித்த அவர், திணைக்களமாக வியாபாரம் செய்யாமல், வியாபாரத் தந்திரோபாயங்களோடு போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்க கூடிய நுட்பங்களை மேம்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு குழுவை ஆரம்பித்து, அந்தந்த பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பில், உதாரணமாக இயங்காது இருக்கின்ற ஆலைகளை மீள இயங்க வைப்பது போன்ற விடயங்களுக்கான தீர்வுகளை, இரு வாரங்களுக்குள் ஆலோசனைகள் பெறப்பட்டு, அதனை அறிக்கையாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறும், அளுநர் பணிப்புரை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago