2025 மே 16, வெள்ளிக்கிழமை

மாவீரர் நாள் நிகழ்வில் அஞ்சலி செலுத்திய வெள்ளைக்காரத் தம்பதிகள்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக, இராச வீதியிலுள்ள காணியொன்றில், நேற்று நடைபெற்றன.

இதன்போது வெள்ளைக்காரத் தம்பதிகள் கலந்துகொண்டு, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளமை அங்கு கூடியிருந்த பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்ட சமநேரத்தில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் பொது நினைவுக் கல்லறைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பங்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரிசையில்காத்திருந்து, மாவீரர் பொது நினைவுக் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது ,வெள்ளைக்காரத் தம்பதியினரான கணவனும், மனைவியும் பல நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து, மாவீரர் பொது நினைவுக் கல்லறைக்கு மலரஞ்சலி செலுத்தினர். இருவரும் மலரஞ்சலி செலுத்திய பின்னர், இரு கரம் கூப்பி வீரவணக்கமும் செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .