2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘முதலமைச்சராக போட்டியிடும் எண்ணம் இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 27 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக போட்டியிடும்  எண்ணம் தனக்கில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்று (26) மாலை ஊடக சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது ‘வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதே’ என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே  சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது, “நான் போட்டியிடுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ஏனெனில் அவ்வாறு போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. அதேபோன்று கட்சிக்கும் அவ்வாறானதொரு எண்ணம் கிடையாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X