Editorial / 2018 மே 09 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகள் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டன.

முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்தே குறித்த உதவிகள் முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் வாராந்தம் நடைபெறும் பொதுமக்கள் சந்திப்பின்போது வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்கள் தமக்கான வீட்டுத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய அந்த மக்களது உண்மையான நிலைமைகளை ஆராய்ந்து முதலமைச்சர் செயலக அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகளுக்கே 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
22 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
42 minute ago
3 hours ago