2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதலமைச்சர் - ஆனந்தசுதாகரின் உறவினர் சந்திப்பு

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

ஆனந்தசுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியை வலியுறுத்துமாறு கோரி, ஆனந்தசுதாகரின் உறவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (21) சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் அழைப்பினையடுத்து முதலமைச்சரை சந்தித்த ஆனந்தசுதாகரனின் உறவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் தந்தையை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் உறவினர், முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.

இதனையடுத்து, ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பில் தானும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அதன் பிரதியை உறவினரிடம் வழங்கியுள்ளதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்குக்காக குறுகிய நேர விடுப்பில் வந்த ஆனந்த சுதாகருடன் சிறைக்கு அவரது குழந்தைகள் செல்ல முற்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X