2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

’மூன்று நாள்களுக்குள் தடுப்பூசியை ஏற்றி முடிக்கவும்’

Niroshini   / 2021 மே 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகணத்தில், வரும் மூன்று நாள்களுக்குள் தடுப்பூசி ஊற்றும் பணியை முடிக்குமாறு, வடமாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்கஷ உத்தரவிட்டுள்ளார்.

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில், இன்று (31) இடம்பெற்ற கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையத்துக்கு வருகை தந்த அமைச்சர் நாமல் ராஜபக்கஷ,  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆலோசனை வழங்கியபோதே,இவ்வாறு வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது,  மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்,  மாவட்டச் செயலாளர் க.மகேசன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .