Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மார்ச் 26 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் அதி சொகுசு பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு ஏ9 வீதியில் மீசாலை வீரசிங்கம் பாடசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழுப்பு நோக்கி சென்று கொண்டிருந்த அதி சொகுசு பஸ் பாதசாரிக் கடவையில் பிறிதொரு வாகனத்தை வேகமாக முந்திச் செல்ல முற்பட்ட வேளை கிளிநொச்சியிலிருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொன்டிருந்த குடும்பஸ்தரை மோதியதில் குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் விவேகாணந்த நகர் கிழக்கு கிளிநொச்சியை சேர்ந்த 41 வயதுடைய சின்ராசா சுதன்ராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து தப்பித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
50 minute ago
1 hours ago