Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 31 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“எனது குடும்பத்தில் ஏற்பட்டது சாதாரண பிரச்சனை. அதனை தீர்க்க விரும்பி இருந்தால் அதனை சாதரணமாக தீர்த்து வைத்து இருக்கலாம். அதனை யாரும் செய்யவில்லை. அதனால், இன்று என்னுடைய வாழ்கையும் என் மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கையும் அதனால் பாதிப்படைந்துள்ளது. இது மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்” என அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளியாக மன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட பென்னம்பலம் தனஞ்செயன் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (30) மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார். அதன் போது எதிரியிடம் 'ஏதேனும் சொல்ல விரும்புகின்றீரா?' என நீதிபதி வினாவிய போதே எதிரி அவ்வாறு தெரிவித்து இருந்தார்.
மேலும் தெரிவிக்கையில், “எனது மனைவிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்டது சாதாரண குடும்ப பிரச்சனை. அதனை தீர்க்க விரும்பி இருந்தால் சாதரணமாக தீர்த்து இருக்கலாம். அதனை யாரும் செய்யாததால் தான் பாரிய குற்றம் நிகழ்ந்தது. இதனால் என் வாழ்க்கையும் என் மனைவி பிள்ளையின் வாழ்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்” என மன்றில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .